கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக இன்று (06.04.2020) காலை 06 மணிவரையிலான 24 மணித்தியாலத்தில் 1,327 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்தோடு, 16 நாட்களுக்குள் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 14,795 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.

 இவ்வாறு  எட்டு மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை இன்று 19 மாவட்டங்களில் ஊரடங்கு, 8 மணித்தியாலங்கள்  தளர்த்தப்ட்டுள்ள போதிலும், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ,கம்பஹா,களுத்துறை , கண்டி ,புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.