பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டு பத்து நாட்களின் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அவரது உடல்நிலை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக நோய் அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து அவர் லண்டன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் பிரதமர் மருத்தவ பரிசோதனைகளிற்காக மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பத்து நாட்களிற்கு பின்னரும் பிரதமர் நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் எத்தனை நாட்கள் தங்கியிருக்கவேண்டுமோ அத்தனை நாட்கள் பிரதமர் தங்கியிருப்பார் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொறிஸ்ஜோன் அவசரமான நிலையில் அனுமதிக்கப்படவில்லை என வலியுறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் அவர் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு தலைமை வகிப்பார். மருத்துவமனையிலிருந்தவாறு தனது அமைச்சர்கள் அதிகாரிகளுடன் தொடர்புகொள்வார் என தெரிவித்துள்ளனர்.

பொறிஸ்ஜோன்சன்  வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற திட்டமிட்டிருந்தார் எனினும் காய்ச்சல் தொடர்ந்தும் நீடித்ததால் அவர் டவுனிங் வீதியிலேயே தங்கியிருந்தார்.