வைரசினால் பாதிக்கப்பட்டு;ள்ள அமெரிக்க யுத்தக்கப்பலில் இருந்து கடற்படையினரை அகற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்தமைக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க கடற்படை அதிகாரி பிரெட் குரொசியர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்டின் முன்னாள் கட்டளை தளபதி  கப்டன் பிரெட் குரோசியர் பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னரே நோய் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தினார் என நியுயோர்க் டைம்ஸ் அவரிற்கு நெருக்கமானவர்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இது குறித்து கடற்படை பேச்சாளர் கருத்து கூற மறுத்துள்ளார் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க யுத்தக்கப்பலில் இருந்து கடற்படையினரை அகற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்தமைக்காக  கப்பலின் கட்டளை தளபதி அந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டார்

மிகமோசமான மதிப்பீடுகளை மேற்கொண்டதன் காரணமாகவே குரோசியர் நீக்கப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் கடற்படை செயலாளர் தெரிவித்திருந்தார்.

பிரெட் குரோசியர் கடற்படை தலைமைக்கான தனது கடிதத்தை பலருக்கு அனுப்பியதன் மூலம் சர்ச்சையை உருவாக்கியுள்ளார் என அவர் தெரிவித்திருந்தார்.