(செ.தேன்மொழி)

குருணாகல் வைத்தியசாலையின் மருந்தக களஞ்சியசாலையில் இரசாயன பதார்த்தங்கள் நிறைந்த பாத்திரத்தில் ஏற்பட்ட  தீ காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குருணாகல் போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழைமை முற்பகல் 11.15 மணியளவில் பாரிய தீ பலரவல்  ஏற்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது வைத்தியசாலையின் மருந்தக களஞ்சியசாலையிலே தீ பரவியிருந்ததுடன், இது நான்கு மாடி கட்டத்திலே அமைந்துள்ளது.

இதன்போது தீப்பரவல் கீழ்மாடியிலே ஏற்பட்டிருந்ததுடன், ஏனைய மாடிகளுக்கு தீ பரவலடைவதற்கு முன்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதேவேளை மருந்துகளும் தீக்கிறையாவதற்கு முன்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

குருணாகல் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்களும் நாகரசபையின் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

ஆரம்பத்தில், தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸாரும், வைத்தியசாலையின் குழுவொன்று தீ பரவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது தெரியவந்துள்ளதாவது,

வைத்தியசாலையின் மருந்தக களஞ்சியசாலையில் காணப்பட்ட அதிவிசேட கிருமிநாசினி இரசாயண பதார்த்தத்தை எடுதத்துச் செல்லும் நோக்கில் சுகாதார பிரிவின் உதவியாளர் ஒருவர், டீ.சி.எல் எனப்படும் இந்த இரசாயணம் அடங்கிய நான்குகுப்பிகளை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார். 

இதன்போதே குறித்த குப்பிகள் ஒன்றில் திடீர் தீபரவல் ஏற்படுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தண்ணீரை ஊற்றிய போது தண்ணீருடன் , இரசாயணமும் கலந்து தீ மேலும் பரவியுள்ளது, இது மூன்று மாடிகளிலும் பரவி வந்துள்ளதுடன், இங்கு மருந்துகள் பொதிசெய்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளுக்கும் தீ பரவியுள்ளதாகவே தெரிய வந்துள்ளது.

இதன் போது குறித்த கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் இருந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் நால்வரும் எந்தவித சேதமும் ஏற்படுவதற்கு முன்னர் காப்பாற்றப்பட்டனர். 

இதேவேளை தீப்பரவலின் காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்பட்டிருக்க வில்லை. ஏற்பட்டிக்கும் நட்டம் தொடர்பில் கண்டறிவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், குருணாகலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.