இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுடன் 4 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 175 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் குணமடைந்துள்ளோரின் எண்ணிக்கையும் 33 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 33 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.