திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தனவெட்டை பிரதேசத்தில்,  மதுபோதையிலிருந்த நபர் ஒருவர் தமது தாயுடனான சண்டையில் தாயை கல்லால் அடித்து கொலைசெய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 31 வயதான சந்தேகநபர் சம்பூர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் படி  தெரியவருவதாவது,

சம்பூர் பிரதேசம், தங்கபுரத்தை பிறப்பிடமாகவும் சந்தனவெட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட 31 வயதுடைய சந்தேக நபர் நேற்று தனது மனைவியுடன் முரண்பட்டு விட்டு, வீட்டை விட்டுச் சென்ற தாயை மாலை ஏழு மணியளவில் மனைவியின் வீட்டிற்கு அழைத்துவரும் போது பீடி கேட்டு தாயிடம் சண்டையிட்டுள்ளார்.

தாய் பீடி கொடுக்க மறுத்ததையடுத்து  மதுபோதையிலிருந்த குறித்த நபர் தமது தாயை சந்தனவெட்டை பகுதியில் வைத்து கல்லால் அடித்து கொன்றுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட 51 வயதான குறித்த தாய் போலியோ நோய்த்தாக்கத்திற்குஉள்ளானவர் எனவும்  யாசகம் செய்துவருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்டவரின் சடலம் தற்போது மூதூர் தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொலை குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

தாயை கொலைசெய்த மகன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்