நாட்டில் நிலவிவரும், கொரோனா அச்சம் காரணமாக, பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள் நிறுவப்பட்டு, தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து, வீடுகளுக்கு சென்றோரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளார்.இதன் காரணமாக, தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும் மற்றும் தமது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் மீண்டும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.