பேர்லினுக்கு அனுப்புவதற்கு தயாராகவிருந்த முகக்கவச கொள்கலன்கள் பாங்கொக் விமான நிலையத்தில் இடைமறிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு திசைதிருப்பல்

05 Apr, 2020 | 07:54 PM
image

'நவீனயுக கடற்கொள்ளையில்' ஈடுபடுவதாக அமெரிக்காவை ஜேர்மனி குற்றஞ்சாட்டியிருக்கும் அதேவேளை, கொவிட் - 19 தொற்றுநோய் உலகளவில் பெரும் நாசத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதற்கு மத்தியில் ஜி- 20 நாடுகள் அவற்றின் சொந்த நலன்களுக்காக மாத்திரம் செயற்படக்கூடாது என்று பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

பேர்லினுக்கு நேற்றைய தினம்  அனுப்பப்படவிருந்த பாதுகாப்பு முகக்கவசங்கள் தாய்லாந்து விமானநிலையத்தில் இடைமறிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு திசைதிருப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடும் சீற்றமடைந்த ஜேர்மன் அதிகாரிகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கடுமையாக சாடியிருக்கிறார்கள்.

உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில்  பெரும் பாதிப்பைத் தரக்கூடிய வர்த்தக தற்காப்புவாதத்தை கடைப்பிடிப்பதில் காட்டப்படும் நாட்டத்தை பிரிட்டிஷ்  வெளியுறவு அமைச்சர் டொமினிக் றாப்புடன் சேர்ந்து பிரதமர் ஜோன்சன் கண்டனம் செய்திருக்கிறார். 

இன்றைய நெருக்கடியைக் கையாளுவதற்கான செயற்பாடுகள் முன்னோக்கிச் செல்வதற்கு சர்வதேச கூட்டுப்பணி அவசியமானது என்று  றாப் வலியுறுத்தியிருக்கிறார்.அத்துடன் சர்வதேச வர்த்தகப்பாதைகளை திறந்துவைத்திருக்குமாறு பிரதமரும் வர்த்தக அமைச்சர் லிஸ் ட்ரூஸும் தானும் ஏனைய உலகநாடுகளின் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்தாகவும் அவர் கூறினார்.

   " பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்  வர்த்தக தற்காப்புவாதத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக  தற்போதைய கொவிட் -- 19 பரவலின் அவலங்கள்  மேலும் ஏற்படுவதைத் தவிர்க்க வர்த்தகப் பாதைகளை திறந்துவைத்திருக்குமாறு உலகின் முக்கிய பொருளாதார நாடுகளைக்கொண்ட அமைப்புக்களான ஜி-- 7, ஜி-- 20 ஆகியவற்றை நாம் கேட்டுக்கொள்கிறோம் ' என்ற றாப் சண்டே ரெலிகிராப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.கொரேனாவைரஸை தோற்கடிக்க கூட்டான செயற்பாடு அவசியம் என்றும் அவர் அதில் கூறியிருக்கிறார்.தேசியப்பணியின் பின்னால் பிரிட்டனை ஐக்கியப்படுத்தவும் வௌநாடுகளை ஒன்றுபடுத்தவும் பிரதமர் ஜோன்சன் திடசங்ற்பம் பூண்டிருக்கிறார் என்றும் றாப் குறிப்படிருக்கிறார்.

     ' நவீனயுக கடற்கொள்ளையில்' ஈடுபடுவதாக அமெரிக்காவை ஜேர்மனி குற்றஞ்சாட்டியிருக்கும் அதேவேளை, கொவிட் -- 19 தொற்றுநோய் உலகளாவ பெரும் நாசத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதற்கு மத்தியில் ஜி- 20 நாடுகள் அவற்றின் சொந்த நலன்களுக்காக மாத்திரம் செயற்படக்கூடாது என்று பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

    பேர்லினுக்கு நேற்றைய தினம்  அனுப்பப்படவிருந்த பாதுகாப்பு முகக்கவசங்கள் தாய்லாந்து விமானநிலையத்தில் இடைமறிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு திசைதிருப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடும் சீற்றமடைந்த ஜேர்மன் அதிகாரிகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கடுமையாக சாடியிருக்கிறார்கள்.

    உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில்  பெரும் பாதிப்பைத்தரக்கூடிய வர்த்தக தற்காப்புவாதத்தை கடைப்பிடிப்பதில் காட்டப்படும் நாட்டத்தை பிரிட்டிஷ்  வெளியுறவு அமைச்சர் டொமினிக் றாப்புடன் சேர்ந்து பிரதமர் ஜோன்சன் கண்டனம் செய்திருக்கிறார். 

இன்றைய நெருக்கடியைக் கையாளுவதற்கான செயற்பாடுகள் முன்னோக்கிச் செல்வதற்கு சர்வதேச கூட்டுப்பணி அவசியமானது என்று  றாப் வலியுறுத்தியிருக்கிறார். அத்துடன் சர்வதேச வர்த்தகப்பாதைகளை திறந்துவைத்திருக்குமாறு பிரதமரும் வர்த்தக அமைச்சர் லிஸ் ட்ரூஸும் தானும் ஏனைய உலகநாடுகளின் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்தாகவும் அவர் கூறினார்.

   " பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்  வர்த்தக தற்காப்புவாதத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக  தற்போதைய கொவிட்-19 பரவலின் அவலங்கள்  மேலும் ஏற்படுவதைத் தவிர்க்க வர்த்தகப் பாதைகளை திறந்துவைத்திருக்குமாறு உலகின் முக்கிய பொருளாதார நாடுகளைக்கொண்ட அமைப்புக்களான ஜி-7, ஜி-20 ஆகியவற்றை நாம் கேட்டுக்கொள்கிறோம்' என்ற றாப் சண்டே ரெலிகிராப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.கொரேனாவைரஸை தோற்கடிக்க கூட்டான செயற்பாடு அவசியம் என்றும் அவர் அதில் கூறியிருக்கிறார்.தேசியப்பணியின் பின்னால் பிரிட்டனை ஐக்கியப்படுத்தவும் வௌநாடுகளை ஒன்றுபடுத்தவும் பிரதமர் ஜோன்சன் திடசங்ற்பம் பூண்டிருக்கிறார் என்றும் றாப் குறிப்படிருக்கிறார்.

      இதேவேளை, 3 எம். என்ற அமெரிக்க கம்பெனியின் சீனத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 2 இலட்சம் முகக்கவசங்கள் கொண்ட கொள்கலன்கள்  பேர்லினில் உள்ள சுகாதாரப்பராமரிப்பு பணியாளர்களுக்காக விமானத்தில்  அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், அவை அங்கு வந்துசேரவில்லை என்றும் அந்த கொள்கலன்கள் பாங்கொக் விமானநிலையத்தில் இடைமறிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு திசைதிருப்பப்பட்டதாக ஜேர்மன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    " இந்தச் செயல் ஒரு நவீனயுக கடற்கொள்ளை" என்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் அந்திரெஸ் கீய்செல் பேர்லினில் குற்றஞ்சாட்டியிருக்கிறார். " அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அப்பால் இருக்கும் பங்காளிகளை அமெரிக்கர்கள் இவ்வாறு நடத்தக்கூடாது " என்று அவர் கூறியதாக 'த பைனான்சியல் ரைம்ஸ் ' குறிப்பிட்டிருக்கிறது.

    சர்வதேச விதிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அமெரிக்காவை ஜேர்மன் அரசாங்கம் வலியுறுத்தவேண்டும் என்று கீய்செல் கோரிக்கை விடுத்திருக்கும் அதேவேளை, முகக்கவசங்கள் ஏற்றப்பட்டிருந்த கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து பேர்லின் மேயர் அமெரிக்க ஜனாதிபதியிடம் ஒருமைப்பாட்டு உணர்வு கிடையாது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். 

     கொள்கலன்கள் இடைமறிக்கப்பட்டு  அமெரிக்காவுக்கு திசைதிருப்பப்ட்டதாக கூறப்படுவதை நிராகரித்த 3 எம். நிறுவனம் பேர்லின் பொலிஸுக்காக சினாவிடமிருந்து முகக்கவசங்களை அனுப்புமாறு கேள்விக்கோரிக்கை விடுக்கப்பட்டதாக எந்தவொரு பதிவும் தன்னிடம்  இல்லை என்று கூறியிருக்கிறது. 

     ஆனால், தாய்லாந்தில் உள்ள அடையாளம் வெளிப்படுத்தப்படாத கொள்வனவாளர் ஒருவரினால ஒரு  உயர்ந்த விலைக்கு  முகக்கவசங்கள் வாங்கப்பட்டதாகவும் அவை வைக்கப்பட்டிருந்த இடங்கள் பற்றி எதுவும் தெரியாது என்றும் பேர்லின் பொலிஸின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

     அந்த முகக்கவசங்கள் அமெரிக்காவை சென்றடைந்ததாக வட்டாரங்கள் ஜேர்மன் செய்திச் சேவையான டெர் ரகெஸ்பீகலுக்கு தெரிவித்தன.

     அமெரிக்காவின் தேவைகள் மீது மாத்திரம் கவனத்தைக் குவிப்பதற்கு பதிலாக 3 எம். நிறுவனம் வெளிநாடுகளுக்காக முகக்கவசங்களை தயாரிப்பதாக வெள்ளைமாளிகை குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த தகராறு மூண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13