திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமாச்சத்தீவு பிரதேசத்தில் இன்று அதிகாலை கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதையடுத்து மூவர் கைதுசெய்யப்பட்டதுடன் ஒரு தொகை போதைபொருட்கள் கைபற்றப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக இயங்கிவந்த இரு சகோதரர்களின் கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகைக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முற்றுகைக்குள்ளான கசிப்பு உற்பத்தி நிலையத்தில் 80 லீற்றர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடாவும், 65 லீற்றர் கசிப்பு 3 பெரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குட்டிக்கராச்சி பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களான (வயது 40,35) இருவருடன் உதவியாளரான பைசல் நகர் பிரதேச வாசியான(வயது 38) நபரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM