களனி கங்கையின் தெற்கு ஆற்றுநீர் கட்டுமான பகுதியை அண்மித்த பகுதிகளில் 400 சட்டவிரோத கட்டுமானங்கள் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

குறித்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்பாசன திணைக்களத்தினால் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போதே குறித்த சட்டவிரோத கட்டுமானங்கள் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.