முப்பெரும் திருட்டுக்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு இன்று பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவ்விருவரையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.எய்ச்.எம்.ஹம்சா  உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்குள் குறித்த முப்பெரும் திருட்டுக்களும் இடம்பெற்றுள்ளன.

பண்டாரவளை நகரின் ஊடகநிறுவனமொன்றின் செயற்பாட்டு அலுவலகம், தோவ என்ற இடத்தின் வாத்தக நிலையம், துல்கொல்ல என்ற இடத்திலுள்ள வீடு ஆகியன ஒரு மாதத்திற்குள் உடைக்கப்பட்டு புகைப்பட கருவிகள், வீடியோ கமராக்கள், வர்த்தக நிலையத்தின் விற்பனை பொருட்கள், தொலைக்காட்சி கருவிகள் உள்ளிட்டு பெறுமதி மிக்க பொருட்கள், பணம் ஆகியன திருடப்பட்டிருந்தன.

முப்பெரும் திருட்டுக்கள் குறித்து பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களில் பெரும்பகுதி மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட இருவரும் பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும் நீதிபதி அவ் இருவரையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.