(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற் கொண்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இம் மாதம் 8 ஆம் திகதி வரை மூடுவதற்கு ஏற்கவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

எனினும் தற்போதைய நிலைவரத்தைக் கருத்திற் கொண்டு மறு அறிவித்தல் வரை பயணிகள் விமான சேவைகளை நிறுத்துவதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

எனினும் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான வசதிகள் தடையின்றி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதோடு, பொருட்கள் போக்குவரத்தில் ஈடுபடும் விமான சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும்.

எனினும் சில வரையறுக்கப்பட்ட நாடுகளில் மாத்திரம் சில விமான நிலையங்கள் உள்நாட்டு சேவைக்காக திறக்கப்பட்டுள்ளன.

எனினும் இதன்போது விமான நிலையத்தினூடாக செல்லும் வேறு நாட்டு விமானங்களுக்காகவும் ( Transit Passengers ) அவசர தேவைக்காக தரையிறங்கும் விமான சேவைக்காகவும் ( Emergency Landing ) என்பவற்றுக்காகவும் தொழிநுட்ப விமான சேவைகளுக்காகவும் எரிபொருள் மற்றும் ஏனைய பயணிகள் அற்ற விமான சேவைகளுக்காகவும் விமான நிலையம் திறந்திருக்கும்.

இதேவேளை ஸ்ரீலங்கன் எயா லைன்ஸ் விமான சேவைகள் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இலங்கை விமான சேவை தயாராகவுள்ளது.