உலகளாவிய ரீதியில் இதுவரை 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 64,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி, கொரோனாவினால் 181 நாடுகளையும், பிராந்தியங்களையும் சேர்ந்த 1,203,099 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் 64,774 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 246,893 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுகள் :

அமெரிக்கா: 312,146 

ஸ்பெய்ன்: 126,168 

இத்தாலி: 124,632 

ஜேர்மன்: 96,092 

பிரான்ஸ்: 90,848 

சீனா: 82,574 

ஈரான்: 55,743 

கொரோனாவால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்:

இத்தாலி: 15,362 

ஸ்பெய்ன்: 11,947 

பிரான்ஸ்: 7,560 

பிரிட்டன்: 4,313 

ஈரான்: 3,452 

சீனா: 3,210 

அமெரிக்கா: 2,624 

நெதர்லாந்து: 1,651 

ஜேர்மன்: 1,444 

பெல்ஜியம்: 1,283