கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று நீர்கொழும்பு ரயில் நிலையம் அருகே இன்று காலை 9.30 மணியளவில் தடம் புரண்டுள்ளது. 

இதன் காரணமாக, புத்தளம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், சீர்செய்யும் பணிகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அவை நிறைவு பெற்ற பின்னர் நீர்கொழும்பு வழியான ரயில் சேவைகள் இடம்­பெறும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.