நுரையீரல் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறிந்தால் கீமோதெரபி கதிர்வீச்சு சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்றாலும், அதற்கு யோகா என்ற சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டால் இந்த புற்று நோயிலிருந்து முழுமையான நிவாரணம் பெற முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.பெண்களைவிட ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோயும் ஒன்று. தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கும் மேலான இருமல், கைகள் , தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகு போன்ற பகுதியில் வலி, மூச்சுவிட சிரமம், திடீர் எடையிழப்பு, ரத்தம் கலந்த சளி வருவது போன்றவை இதன் அறிகுறியாக இருந்தாலும், இதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால் கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் தெரபி போன்ற சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.


சிலருக்கு இத்தகைய சிகிச்சை வழங்கும் பொழுது அவர்களது உடலும், மனமும் போதிய அளவிற்கு ஒத்துழைப்பதில்லை. இத்தகைய நிலையில் மருத்துவர்கள் யோகா சிகிச்சையை பரிந்துரை செய்கிறார்கள். இத்தகைய சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலும், உள்ளமும் போதிய அளவிற்கு ஓய்வு பெற்று, வலிமை அடைகிறது என்றும், மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சைக்கு பலன் கிடைக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் யோகாவை தொடரும் பொழுது நுரையீரல் புற்று நோயாளிகளுக்கு முழுமையான அளவில் நிவாரணமும் கிடைக்கிறது என்கிறார்கள்.