(இரா.செல்வராஜா)

சூரியன் தென் துருவத்தில் இருந்து வட துருவத்தை நோக்கி நகர்வதால் நாட்டில் ஆறு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய  சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவிக்கிறார்.

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், ஊவா , தென் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் மழை பெய்யலாம் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் மேலும் தெரிவித்தார்.


வானிலை அவதான நிலைய அதிகாரி மேலும் தகவல் தருகையில், நாளை(ஞாயிறு) முதல் 14 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும். இக்காலக்கட்டத்தில் வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும். 

மழை பெய்யும் பகுதிகளில் இடி, மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்