கொரோனா குறித்து பரிசோதனைகளை முன்னெடுக்காது தேர்தலுக்கான சூழலை ஏற்படுத்த முடியாது - ரணில்

Published By: Digital Desk 3

04 Apr, 2020 | 08:26 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கை மாத்திரமல்லாது முழு உலகும் பாரியதொரு சுகாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பதற்றமும் அவசரமும் ஏற்றுக்கொள்ள கூடியதொன்றல்ல.  நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து  பரிசோதனைகளை முன்னெடுக்காது தேர்தலுக்கான சூழலை ஏற்படுத்த முடியாது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்யப்பட வேண்டும். அநாவசியமாக இந்த விடயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டால் மத வாத பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கவின் பாராளுமன்ற குழு மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,

பொதுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமாயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அற்ற சூழலை அரசாங்கம் முதலில் உறுப்படுத்த வேண்டும். நாட்டில் பரவி வரும் வைரஸ்  தொற்றுக்குறித்து சோதணையிட தேவையான உபகரங்கள் மற்றும் இவ்வாறான வைரஸ் தொற்று தொடர்பாக நிபுணத்துவம் கொண்ட சுகாதார ஊழியர்கள் இன்மை அரசாங்கம் எதிர்க்கொள்ளும் அடுத்த கட்ட சவாலாகியுள்ளது.

எவ்விதமான அச்சப்பாடுகளுமின்றி மக்கள் வாக்களிப்புகளில் கலந்துக்கொள்ள வேண்டுமாயின் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் குறித்து பரிசோதணைகளை முன்னெடுத்து பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதனை உறுதி செய்யப்பட வேண்டும். எனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறித்து நாடளாவிய ரீதியில் கண்டறியாது தேர்லை நடாத்துவதில் அரசாங்கம் காட்டும் ஆர்வம் பயனற்றதாகும். 

இதே வேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் விதம் குறித்து அநாவசியமாக தகவல்களை பரப்ப வேண்டாம். சுகாதார முறைப்படியே அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளும் மற்றும் எதிக்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினையின் போது சுகாதார துறையினர் மற்றும் வைத்தியர்கள் வழங்கும் ஆலோசனைகளின் பிரகாரமே செயற்பட வேண்டும்.

தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பிடிவாத போக்குடன் செயற்பட்டால் மதவாத பிரச்சினைகளே ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40