கொரொனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட்-19 தொற்றுநோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் சமூக இடைவெளியை பேணுவதற்காக வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்  (Work from Home) கலாசாரத்துக்கு மாற்றியுள்ளது.

வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறைக்கு மாறிய நிறுவனங்கள் பலவும் ஜூம் (Zoom) என்ற செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.

பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது என்பதே இந்த செயலியில் இருக்கும் பெரிய நன்மையாகும்.

வீடியோ ஒன்றுகூடல், ஓடியோ அழைப்புகள், பிரைவேட் சாட்கள் என அனைத்து விதமான தொடர்பு முறைகளையும் ஒரே செயலியிலேயே பெறலாம் என்பதும், புதிதாகக் கணக்கு தொடங்க வேண்டிய தேவை இல்லை, எளிதாகப் பயன்படுத்தலாம் என்பதும் பலரும் இதை உபயோகிக்கக் காரணமாக இருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஜூமின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

கூகுளின்  சந்திப்பு (Hangouts) மற்றும் மைக்ரோசொப்ட் ஸ்கைப்பிற்கு (skype) போட்டியாக ஜூம் செயலி தற்போது தலையெடுத்து வருகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை.

இந்நிலையில் ஜூம் செயலி விண்டோஸ் கடவுச்சொற்களை ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜூம் (Zoom)  செயலியை உபயோகிக்கும் போது ஏற்படும் தாக்கம்

  • உங்கள் கணணியை கட்டுப்படுத்த முடியாமல் போகும்
  • தீங்கிழைக்கும் மென் பொருள் (malware installation) கணணியில் சேமிக்கும் 
  • ஒரே கடவுச்சொல்லை கணினி , வேறு செயலிகளுக்கு பயன்படுத்தினால் அதற்குள்ளும் ஊடுறுவும்
  • உங்கள் தகவல்கள் திருடப்படும்.

பாதுகாப்பு வழிமுறைகள்

  • வலுவான கடவுச்சொல்லை உபயோகிக்கவும்
  • தெரியாத மற்றும் அறியாத  லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்
  • தொலைத்தொடர்பிற்கான மாற்று வழியை பின்பற்றவும்

இந்த சிக்கலை சரிசெய்ய ஜூம் ஒரு இணைப்பை வெளியிட்டுள்ளது. ஜூம் (Zoom) விண்டோஸ் பதிப்பு 4.6.9 க்கு கிடைக்கக்கூடிய இந்த சமீபத்திய பேட்சைப் பயன்படுத்துமாறு கோரியுள்ளது. 

மேலும் தகவலுக்கு கீழேயுள்ள இணைப்பைப் பார்க்கவும்

https://support.zoom.us/hc/en-us/articles/201361953-New-Updates-for-Windows