இலங்கையில் கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். 

அதன்படி கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்றால் இதுவரை இலங்கையில் பதிவான 5 ஆவது மரணமாக இது அமைந்துள்ளது. 

இத்தாலியில் இருந்து இலங்கை திரும்பிய 44 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஐவர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 24 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.