கொவிட்-19 விழிப்புணர்வு தொடர்பாக விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய மோடி!

By T. Saranya

03 Apr, 2020 | 07:59 PM
image

கொவிட்-19  விழிப்புணர்வு தொடர்பாக சச்சின், தோனி, கோலி, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டுப் பிரபலங்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.

கொவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். கொவிட்-19 நோய்த் தொற்று  சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட இந்திய பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி, கங்குலி, சேவாக் உள்ளிட்ட 49 விளையாட்டுப் பிரபலங்களுடன் காணொலி காட்சி முறையில் ஒரு மணி நேரம் இந்திய பிரதமர் மோடி கலந்துரையாடினார் .

கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் விஸ்வநாதன் ஆனந்த், பி.வி. சிந்து, அபிஷேக் வர்மா, அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட இதர விளையாட்டுப் பிரபலங்களுடனும் உரையாடிய மோடி, கொவிட்-19 பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு பிரபலங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

குறைந்த நேரமே இருந்ததால் மோடியுடன் 9 வீரர்கள் மட்டுமே உரையாட முடிந்தது. விளையாட்டு வீரர்களும் அரசின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52
news-image

பூனைக்காக நபரொருவரைக் கொலை செய்த யுவதி

2022-10-05 12:27:48
news-image

டுபாயில் கோவில் திறக்கப்பட்டது

2022-10-05 11:44:35
news-image

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல்...

2022-10-04 09:13:35
news-image

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

2022-10-03 14:40:30
news-image

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல...

2022-10-02 12:50:44
news-image

ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது...

2022-10-02 12:19:52
news-image

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் :...

2022-10-02 10:05:52
news-image

மறைந்த பிரித்தானிய மகாராணியின் இறுதி ஊர்வலத்தில்...

2022-10-01 15:17:12
news-image

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஸ்யாவுடன்...

2022-10-01 12:51:36