உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

Published By: J.G.Stephan

03 Apr, 2020 | 05:05 PM
image

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரான, உதயங்க வீரதுங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் 4 இனை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் குறித்து கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பிலான வழக்கு விசாரணை, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, 25 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 500 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் இவ்வாறு செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.

 இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணையின் போது விளக்கமறியலில் உள்ள உதயங்க வீரதுங்க மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. சுகயீனம் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெறுவதாக மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

 இந்நிலையிலேயே முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் அவருக்கு பிணையளித்ததுடன், பிணை நிபந்தனைகளை அடுத்த வழக்குத் தவணையின் போது பூர்த்தி செய்வது போதுமானது என அறிவித்து, வழக்கை எதிர்வரும் மே 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

 

இந்நிலையிலேயே  சொந்த பிணையில் இன்று செல்வதற்கு உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உதயங்க வீரதுங்கவிற்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் கடந்த புதன்கிழமை எழுத்து மூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.எனினும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு,  அதனை விஷேட காரணியாக கருதி அவருக்கு பிணை வழங்குமாறு அவரின் சட்டத்தரணிகளால் கோரப்பட்டது.

இந்நிலையிலேயே வீடியோ தொழில் நுட்பத்தினூடாக உதயங்க வீரதுங்கவின் நிலை தொடர்பில் நீதவான் பரிசீலித்த பின்னர் இந்த பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

உதயங்க வீரதுங்கவிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இதன்போது உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் 4 இனை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விடயம்  தொடர்பிலேயே  உதயங்கவுக்கு மேலதிகமாக, மேலும் நான்கு வெளிநாட்டு பிரஜைகளையும் இரு வெளி நாட்டு நிறுவங்களையும் அம்மோசடிகளுடன் நேரடி தொடர்புடைய சந்தேக நபர்களாக விசாரணையாளர்கள் பெயரிட்டுள்ளனர்.   உக்ரேன் மார்ஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரும் உக்ரேன் பிரஜையுமான டி.ஏ. பெரகெடோவ், டி.எஸ். எலயன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் சிங்கப்பூர் பிரஜையுமான ரி.எஸ். லீ, உக்ரைன் பிரஜையும் பெலிம்ஷா ஹோல்டிங்ஸ் நிறுவன பணிப்பாளருமான மைகோலா குல்டேர்கைவ், சிங்கப்பூர் பிரஜையான டி.எஸ்.எலயன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் என்.ஜி.லை கிம்,  டி.எஸ். எலயன்ஸ் நிறுவனம் மற்றும் பெலிம்ஷா ஹோல்டிங்ஸ் ஆகியவையே இந்த விவகாரத்தில் சந்தேக நபர் பட்டியலில் உள்ள ஏனைய நபர்களும் நிறுவனங்களும் ஆகும்.

 2015.03.10 ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரன்சிஸ்  தலைமையிலான குழுவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தற்போது சி.ஐ.டி.யின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் அவற்றை முன்னெடுக்கின்றனர்.

 2006 ஆம் ஆண்டு உக்ரைனின் யுக்ரேன் மாஷ் எனும் நிறுவனத்திடம் இருந்து  லண்டன் தரகு நிறுவனம் என கூறப்பட்ட பெலிம்ஷா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலையீட்டுடன் 4 மிக் 27 ரக விமாங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. அத்துடன் இலங்கையிடம் இருந்த அதே ரக விமாங்கள் நான்கினை ஓவர்ஹோல் நடவடிக்கைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக 2015.03.10 ஆம் திகதி நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன. 1980 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட குறித்த விமாங்கள் கொள்வனவின் போது உரிய விலையை விட கிட்டத்தட்ட 400 மில்லியன் ரூபா அதிகம் விலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.  இது குறித்தான மேலதிக விசாரணைகளில்  உதயங்க வீரதுங்க இக்கொடுக்கல் வாங்கலின் பிரதான நபராக செயற்பட்டுள்ளமையை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்தனர்.

 இந் நிலையிலேயே இம்மோசடி தொடர்பில்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் B 639/15 எனும் இலக்கத்தின் கீழ் கோட்டை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அதில்  சந்தேக நபர்களாக 5 பேரும் இரு நிறுவங்களும் பெயரிடப்பட்டனர். அவர்களில் முதல் சந்தேக நபரான உதயங்க வீரதுங்கவே  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30