உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு மில்லியனையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபர தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதன்படி இதுவரை உலகளாவிய ரீதியில் 10 இலட்சத்து 16 ஆயிரத்து 401 பேர் (1,016,401) இதுவரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 53,160 ஆக பதிவாகியுள்ளதுடன், குணமடைந்தோர் எண்ணிக்கை 211,775 ஆக காணப்படுகின்றது.

அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுகள்:

 • அமெரிக்கா: 245,559 
 • இத்தாலி: 115,242 
 • ஸ்பெய்ன்: 112,065 
 • ஜேர்மனி: 84,794 
 • சீனா: 82,464 
 • பிரான்ஸ்: 59,929 
 • ஈரான்: 50,468 

கொரோனாவினால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகள்:

 • இத்தாலி: 13,915 
 • ஸ்பெய்ன்: 10,348 
 • பிரான்ஸ்: 5,387 
 • சீனா: 3,203 
 • ஈரான்: 3,160 
 • பிரிட்டன்: 2,921 
 • அமெரிக்கா: 1,562 
 • நெதர்லாந்து: 1,339 
 • ஜேர்மனி: 1,107 
 • பெல்ஜியம்: 1,011 

டிசம்பர்  மாதத்திற் இறுதிப் பகுதியில் சீனாவின், ஹூபே மாகாணத்தில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது உலகளாவிய ரீதியில் 181 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பரவியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகளின்படி இதுவரை 1,016,401 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் கணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது அதனைவிடவும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முதல் 100,000 கொரோனா தொற்றாளர்கள் ஒன்றரை மாத்தில் அடையாளம் காணப்பட்டனர். அதன் பின்னரான காலக் கட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது வேகமாக அதிகரித்துள்ளமையினை அவதானிக்க முடிகிறது.