இலங்கையில் இன்று (03.04.2020) மற்றுமொறு  கொவிட்-19 தொற்றாளர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது  கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்கள் 151 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில் 125 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, 251 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.