ஊரடங்குச் சட்டத்தின் போது பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் மொரட்டுவை - எகொட உயன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த காரில் 4 பேர் பயணித்த போதிலும் மூவர் காயமடைந்துள்ளதுடன் அக்காரில் பயணித்த நால்வரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.