(எம்.எப்.எம்.பஸீர்)
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிரதான குற்றவியல் விசாரணைகளில் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிகளுக்கு குண்டினை எடுத்துச் செல்லவும், குறித்த இடத்தை அடையவும் உதவி செய்து நெறிப்படுத்தியதாக கூறப்படும் இருவர் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் காலி வீதி, கல்கிசை எனும் முகவரில் வசித்த பிரதான சந்தேக நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவும் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் வைத்தும் கொத்தட்டுவ பகுதியில் வைத்தும் இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த மார்ச் 29 ஆம் திகதி, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் வழி நடாத்தலில் செயற்பட்ட குழு, மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபரை அங்கு அழைத்துச் சென்று, அவரை வழி நடாத்தியுள்ளமை தொடர்பில் கல்கிசை பகுதியில் ஒருவரைக் கைது செய்தது.
அவரிடம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் முக்கிய தகவல்கள் சில வெளிப்படுத்தப்பட்டுளன.
அதன் பிரகாரமே சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தககுதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியை நெறிப்படுத்தியவரை கொத்தட்டுவையில் வைத்தும், கொச்சிக்கடை தேவாலயம் மீதான தாக்குதல்தாரியை அங்கு அழைத்துச் சென்ற நெறிப்படுத்தியமை தொடர்பிலான நபரை மட்டக்குளியில் வைத்தும் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரிடமும் தற்சமயம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை கண்டறியப்படாத பல்வேறு மர்மங்களுக்கு விடை கிடைத்துள்ளதாகவும், அதன்படி அடுத்து வரும் நாட்களில் பல எதிர்பாராத சந்தேக நபர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவாபிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்காகிய கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.
இதனைவிட கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
இந்நிலையில் அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.
இந் நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் சி.ஐ.டி.இன் 12 சிறப்பு குழுக்களும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM