பிரேசிலில் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அமேசன் மழைக்காட்டில் உள்ள கிராமமொன்றை சேர்ந்த பெண்ணொருவர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரேசிலின் 300 ற்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் மத்தியில் நோய் பரவியது இது முதல்தடவை என பிரேசிலின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொலம்பியாவின் எல்லைக்கு அருகில் உள்ள சான்டோ அன்டோனியோ டொ லாவில் கொகாமா பழங்குடி இனத்தை சேர்ந்த 20  வயது பெண்ணொருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட பகுதியில் நால்வர் தொற்றிற்கு இலக்காகியுள்ளதை தொடர்ந்து வைரஸ் பழங்குடி இனத்தவர்கள் மத்தியில் பரவலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட மருத்துவருடன் பணிபுரிந்த பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளார் .

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் தென் பிரேசிலில் இருந்து பழங்குடி இனத்தவர்களுடன் பணிபுரிய வந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.