காதலியை கொலைசெய்துவிட்டு  அவர் தனக்கு  கொரோனா வைரசை பரப்பினார் என பொய் குற்றச்சாட்டை சுமத்திய இத்தாலியின் ஆண் தாதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிலிசி என்ற பகுதியில் உள்ள மெசினாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அன்டொனியோ டி பேஸ் என்ற அந்த நபர் தனது காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயன்றவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனது காதலி தனக்கு கொரோனா வைரசினை பரப்பியதன் காரணமாகவே தான் அவரை கொலை செய்தேன் என அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் இருவருக்கும் வைரஸ் பாதிப்பில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இருவரும் கொரோனா வைரஸ் பணிக்காக குறிப்பிட்ட மருத்துவமனையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.