இலங்கையில் கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 151 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான 21 பேர் குணமடைந்துள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.