நாட்டில் நாளிற்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நேற்றைய தினம் மூன்றாவது நபராக மருதானையை சேர்ந்த நபரொருவர் உயிரிழந்தார்.இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்த 73 வயதான நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.