(அட்டன் கிளை) 

அட்டன் மற்றும் டிக்கோயா நகரங்களில் காய்கறிகளின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் இந்த நகரை அண்மித்து உள்ள பெருந்தோட்டங்களில் விளையும் காய்கறிகள் பெருமளவில் தற்போது குறித்த நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன.

அட்டன் மல்லியப்பு சந்தி பிரதேசத்திலிருந்து பஸ் நிலையம் வரை வீதி ஓரங்களில் இவ்வாறு காய்கறிகளை விற்பனை செய்வதற்கு அட்டன் –டிக்கோயா நகரசபை அனுமதியை வழங்கியுள்ளது. ஊடரடங்கு தளர்த்தப்பட்டவுடன் பொது மக்கள் காய்கறி சந்தைகளில் கூட்டமாக இருப்பதை தவிர்க்கவும் அனைவரும் காய்கறிகளை தட்டுப்பாடில்லாமல்  கொள்வனவு செய்தற்கும் இந்த அனுமதியை தற்காலிகமாக வழங்கியுள்ளதாக நகர சபை தெரிவிக்கின்றது.