மார்ச் 31 ஆம் திகதியுடன் கலாவதியாகும் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் வழங்கிய அனைத்து அனுமதிகளும் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.