கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 க்கான பிளேஒப் போட்டிகள் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் 2021 ஆண்டு இடம்பெறவிருந்த மகளிர் யூரோ கிண்ணத்தற்கான தகுதிப் போட்டிகள் உட்பட ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை இடம்பெற்ற ஐரோப்பிய கற்பந்து சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit : Daily Exclusives Ug