கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான 134 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை லண்டனில் இடம்பெறவிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று பிரிட்டனில் வேகமாக பரவுவதால் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு விம்பிள்டன் போட்டிகளை இரத்து செய்வதாக பிரிட்டன் டென்னிஸ் கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதற்கு முன்பு முதலாவது மற்றும் 2 ஆவது உலகப்போரின் போது இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.