உலகின் மிகவும் பலம்பொருந்திய நாட்டை செயலிழக்கச்செய்திருக்கும் வைரஸ் 

02 Apr, 2020 | 01:11 PM
image

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு நெருக்கமான ஊடகங்கள் ஒரு மாதத்துக்கு முன்னர் கொரோனாவைரஸை ஒரு " கேலிக்கூத்து " என்று வர்ணித்தன. இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு (ஏப்ரில் 12) அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை வழமைநிலைக்கு கொண்டுவர உத்தேசிப்பதாக ஒரு வாரத்துக்கு முனனர் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால்,  கொரோனாவைரஸ் தொற்றுக்கு இலக்காவோரி்ன் எண்ணிக்கையில் ஏற்பட்ட கடும் அதிகரிப்பும் நியூயோர்க் போன்ற நகரங்களில் பாரதூரமான அளவில் வைரஸின் பரவலும்  தொற்றுநோயின் ஆபத்துக்களை ட்ரம்ப் நிருவாகத்துக்கு தெளிவாகப் புரியவைக்கவில்லை என்றால், விஞ்ஞானிகளினால் வெளியிடப்பட்டிருக்கும் முற்கணிப்பு  எச்சரிக்கைகள் இறுதியில் அதை  இவ்வாரம் செய்திருக்கும்.

   இந்த வைரஸின் விளைவாக நாட்டில்  100,000 க்கும்  240,000 க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான  மரணங்கள் ஏற்படக்கூடும் என்று அமெரிக்காவில் உள்ள பிலபல தொற்றுநோயியல் நிபுணரான அந்தனி  ஃ போஸியும் கொரோனாவைரஸ் பரவலுக்கு எதிரான வெள்ளைமாளிகை நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளரான டிபோரா பிறிக்ஸும் ட்ரம்புக்கு கூறினார்கள். அதையடுத்து ட்ரம்ப் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியதுடன் அடுத்துவரும் இரு வாரங்களும் வேதனை மிகுந்தவையாக இருக்கும் என்று அமெரிக்கர்களை எச்சரிக்கை செயதார்.

    அமெரிக்காவில் உள்ள நெருக்கடி தெளிவாகத்தெரிகிறது. முதலாவதாக, அதிகாரம் வலுவற்றதாக இருக்கிறது என்பதை தொற்றுநோய் வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. அமெரிக்காவிடம் வளங்கள், ஆராய்ச்சி வல்லமை, உட்கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் சுகாதாரப்பராமரிப்பு முறைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், கொவிட் -- 19 சீனாவின் அத்திபாரத்தைஉலுக்கியதைப் போன்று அமெரிக்காவையும்  முடமாக்கிவிட்டது. இந்போது அது ஜரோப்பாவை நிலைகுலையச் செய்திருக்கிறது. 

   கடந்த ஒரு தசாப்த காலமாக அமெரிக்காவில் உள்நோக்கிய போக்கொன்று வளர்ந்துவந்திருக்கின்ற அதேவேளை, கொவிட் -- 19 நெருக்கடி இந்த போக்கை மேலும்  உள்நோக்கியதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் புனர்நிர்மாணத்தில் கவனம் குவியுமபோது இது தவிர்க்கமுடியாததாகிறது. 

    இரண்டாவதாக, தற்போதைய நெருக்கடி தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது. விஞ்ஞானம் மற்றும் நிபுணத்துவம் குறித்து பெரிதாக அக்கறையில்லாதவராக தெரிகின்ற ஜனாதிபதி அச்சுறுத்தலை பாரதூரமானதாக கருதிச் செயற்படத்தவறினார். கட்டுப்பாடுகளை விதிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள், மந்தகதி மருத்துவப் பரிசோதனைகள், சுகாதார முறைகளை துரிதமாகத் தயார்ப்படுத்த தவறியமை எல்லாம் வைரஸ் தொற்று பரவலுக்கு வழிவகுத்தன. இந்த நிலைவரம் இவ்வருட பிற்பகுதியில் திட்டமிடப்படடிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய தாக்கத்தை( தேர்தல் நடைபெறுமாக இருந்தால் )  செலுத்தும் என்பது தெளிவாகத்தெரியவில்லை. எவ்வாறெனினும் நெருக்கடிக்காலத்தில் வெளிக்காட்டப்படும்  பலவீனமான தலைமைத்துவப் பண்பு தாக்கத்தைச் செலுத்தும் என்பது வெளிப்படையானது.

    மூன்றாவதாக, தற்சமயம் ஏனைய பல நாடுகள் எதிர்நோக்குவதைப் போன்ற அதே வரையறைகளுக்கு அமெரிக்காவும் முகங்கொடுக்கின்றது போலத் தெரிகிறது. இது சவாலின் உலகளாவிய தன்மையை மீண்டும் ஒரு தடவை வெளிக்காட்டுகிறது. அதாவது சுகாதாரப்பணியாளர்களுக்கு தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நோயாளர்களுக்கான காற்றோட்டக் கருவிகளுக்கு  நிலவும் தட்டுப்பாடு, பொருளாதார செயற்பாடுகள் முடக்கம், முன்னென்றும் இல்லாதவகையிலான வேலையில்லாத்திண்டாட்டம் ஆகியவை இவற்றில் முக்கியமானவையாகும்.

    உலகில்  சிறந்த விஞ்ஞான உட்கட்டமைப்பு அமெரிக்காவில் உள்ளது.இதனால்  அந்த நாட்டிலேயே இறுதியில் இந்த வைரஸுக்கு எதிரான  தடுப்புமருந்து கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய உறுதிவாய்ந்த தனியார்துறையும் புதிய தொழில்முயற்சி உணர்வும் மீட்சியை சாத்தியமாக்கும்.அதேவேளை, உலகளாவிய பொருளாதார மற்றும் மூலோபாய ஆதிக்கமும் சர்வதேச ஒழுங்குமுறையில் அமெரிக்கா செல்வாக்கைச் செலுத்த அனுமதிக்கும்.ஆனால், எவருமே , எந்த நாடுமே இன்றைய வைரஸ் ஆபத்துக்கு விதிவிலக்கு அல்ல என்பதை நெருக்கடி அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.

 ( இந்துஸ்தான் ரைம்ஸ் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்கு சிறந்த ஜனாதிபதியை தெரிவுசெய்தல்

2024-09-17 08:26:10
news-image

ரணில் - சஜித்தை இணைக்க முயற்சித்தேன்; ...

2024-09-16 14:22:28
news-image

தெற்கின் ஆதரவுடன் சஜித் வடக்கு -  ...

2024-09-16 14:08:30
news-image

வடக்கு, கிழக்கு மக்களுக்கு நியாயமான தீர்வு...

2024-09-16 14:00:57
news-image

ஜனாதிபதித் தேர்தலும் இனவாதங்களும்

2024-09-16 11:13:33
news-image

தீர்க்கமான தருணம் மக்களே கவனம் !

2024-09-15 19:15:44
news-image

ரஷ்யாவின் சிவப்பு எல்லைக் கோடு?

2024-09-15 18:55:31
news-image

கானல் நீராகும் யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

2024-09-15 18:48:52
news-image

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் வேண்டுமா, வேண்டாமா?

2024-09-15 18:47:46
news-image

துருக்கியின் ‘பிறிக்ஸ்’ இணைவு

2024-09-15 18:17:01
news-image

பெருமைகள் அழிந்து குழப்பங்கள் வலுக்கும் தமிழ்...

2024-09-15 18:43:44
news-image

பொன்சேகாவை தோளில் சுமந்த சுமந்திரனும் விக்கியும்...

2024-09-15 17:56:22