கொள்ளைநோயான கொரோனா எனப்படும் கொவிட் 19 நோயினால் பலியெடுப்பு இன்னும் தீர்ந்தபாடிலில்லை தற்போதுவரை கொவிட் 19 எனப்படும் நோயினால் உலகளாவிய ரீதியில் இதுவரை 47,245 பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 935,957 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 194,286 பேர் குணமடைந்துள்ளனர்.

சாதாரணமாக தினந்தோறு உலகளாவிய ரீதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் உயிரிழந்து வருவதையும் 

இந்த கொள்ளைநோயானது உலகளவில் 203 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை தற்போது குறிவைத்துள்ளது. 

நேற்றுவரை அமெரிக்காவில் 215,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 5,102 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 1,049 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 110,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13,155 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் இங்கு 727 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, ஸ்பெயினில் 104,118 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,387 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு நேற்று மாத்திரம் 923 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனால் சீனாவில் இதுவரை 81,554 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,312 பேர் இறந்துள்ளதுடன் நேற்று மாத்திரம் அங்கு 7 மாத்திரம் பலியாகியுள்ளனர்.

இந்த கொள்ளை நோயான கொரோனா வகையைச் சேர்ந்த கொவிட் 19 இனது ஆரம்பமாக சீனாவின் ஹுபே மாகாணத்தின் வுஹான் நகரம் கருதப்படுகின்ற நிலையில், அங்கு பாதிப்புகளோ உயிரிழப்புகளோ  ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போதிலும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதேவேளை, பிரான்ஸ் நாட்டில் இதுவரை 56, 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4,032 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 509 பேர் பலியாகியுள்ளனர்.

ஜேர்மனியில் இதுவரை 77,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 931 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் ஜேர்மனியில் 156 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானில் இதுவரை 47,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 3,036 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 138 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இதுவரை 29,474 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,352 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 563 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று மாத்திரம் உலகளவில் புதிய கொவிட் 19 நோய்த்  தொற்றாளர்களாக 73,872 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 4,890 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (01- 04- 2020 ) தரவுகளின் படி அமெரிக்காவிலேயே அதிக உயரிழப்புக்களும் பாதிப்புகளும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலகிலுள்ள அனைத்து நகரங்களும் முடக்கப்பட்டுள்ளன. அன்றாட மனித வாழ்க்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் உணவிற்கான தட்டுப்பாடுகள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன. அத்துடன் நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை 148 கொவிட் 19 நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர். இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, 3 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.