நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு சிகிச்சையளித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - இராணுவத் தளபதி

01 Apr, 2020 | 09:19 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த  நபருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் உள்ளிட்ட 11 சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள கொவிட்-19 ஊடக மத்திய நிலையத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வைக்கால பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் குறித்த 11 பேரும் தனிமைப்படு;த்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு பேருதோட்டையைச் சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவரது சடலம் செவ்வாய்கிழமை நீர்கொழும்பில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right