தமிழ்நாட்டில் கொரேனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 100 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுடில்லி நிஜாமுதீன் மசூதியில்  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டவர்களை தமிழக தனிமைப்படுத்தி சோதனையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நோய் உறுதிப்படுத்தப்பட்ட அனைவரும் புதுடில்லி மசூதிக்கு சென்றவர்கள் என தமிழ்நாட்டின் சுகாதாரசெயலாளர்  பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதுடில்லியில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் உள்ளவர்களை தாமாக முன்வந்து தகவல்களை வழங்குமாறும்  இதன் மூலம் ஏனையவர்களை காப்பாற்றுமாறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடில்லி நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொண்ட 1500 பேரில் 1131 பேர் மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர் எனவும் ஏனைய 515 பேரை கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய விலாசங்கள் இல்லாததால் ஏனையவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள் மாத்திரமின்றி மாநிலத்தில் பலர் பாதிக்கப்படப்போகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

வைரசின் தாக்கத்தை அறி;ந்துள்ளதால் அவர்கள் தாமாக முன்வந்து தகவல்களை வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.