இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில்,கொவிட் 19 நோய்த் தொற்று சந்தேகத்தில்  231 பேர் சிகிச்சைபெற்றுவருவதுடன்  146 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, இருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.