வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலின் வருடாந்த பெருவிழா கடந்த 27-03-2020 ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

எனினும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக மக்கள் கூடும் இடங்களை அரசு தடைசெய்துள்ளது.

இதற்கமைய கோவிலின் சிவச்சாரியார்களை தவிர பக்தர்கள் கோவிலிற்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனையடுத்து, இன்று புதன்கிழமை காலை திருகோணமலை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் கோயில் பிரதான வீதியில் நின்று பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டததை காணக்கூடியதாக இருந்தது.