இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளா மூவரும் மருதானை,யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் 146 பேர் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 18 பேர் குணமடைந்துள்ளார்கள்.

தற்போது 126 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதோடு, மருத்துவ கண்காணிப்பில் 231 பேர் உள்ளனர்.

அத்தோடு, இருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.