ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது புதன்கிழமை 100,000 யும் கடந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று 94,417 கொரோனா தொற்றாளர்கள் ஸ்பெய்னில் பதிவாகியிருந்தனர். இந் நிலையில் இன்று புதன்கிழமை அந்த எண்ணிக்கையானது 102,136 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் ஸ்பெய்னில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 8,189 காணப்பட்டது. 

எனினும் அது புதன்கிழமையான இன்றைய தினம் 9,053 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஸ்பெய்ன் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Photo Credit : Reuters