சட்ட விரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை வளர்த்தமை தொடர்பிலான குற்றச் சாட்டு தொடர்பில் சரணடைந்த முன்னாள் கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகே தொடர்பில் நுகேகொட நீதிவான் கனிஷ்க விஜேரத்ன வழங்கிய உத்தரவுகள் பல சிக்கலுக்குறிய தவறான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந் நிலையில் திலிண கமகேவுக்கு பிணை வழங்கிய கங்கொடவில நீதிவான் கனிஷ்க விஜேரத்னவின் உத்தரவை திருத்திய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக, பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் பிரகாரம் விஷேட காரணிகளைக் கருத்தில் கொண்டு புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் திலிண கமகேவுக்கு பிணை வழங்கினார்.
நுகேகொட நீதிவானின் உத்தரவை எதிர்த்து சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு மனு மீதான விசாரணைகள் நேற்று இடம்பெற்ற போதே புது நிபந்தனைகளின் பிரகாரம் முன்னாள் நீதிவானுக்கு இந்த பிணை வழங்கப்பட்டது. திலிண கமகேவுக்கு எதிராக உள்ள குற்றச் சாட்டு பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் வராது என நுகேகொட நீதிவான் அளித்த உத்தரவை திருத்திய மேல் நீதிமன்றம் அவருக்கு எதிரான குற்றச் சாட்டு பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழேயே உள்ளது எனவும் குறிப்பிட்டது.
மேலோட்டமாக பார்க்கும் போதே அதனை அவதானிக்க முடிவதாகவும் , மூன்று விஷேட காரணிகளின் அடிப்படையில் சந்தேக நபரான திலிண கமகேவுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பினைகளில் செல்ல அனுமதிப்பதாகவும் மேல் நீதி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் சந்தேக நபரான திலிண கமகேவின் வெளி நாட்டு பயணத்தை தடை செய்து அவரின் கடவுச் சீட்டை நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை 9.30 மணிக்கும் நண்பகல் 12.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு சென்று கையொப்பமிடவும் உத்தரவிட்டார். பிணை நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிணையை ரத்து செய்து வழக்கு முடியும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைப்பதாகவும் நீதிபதி எச்சரித்தார்.
சகுரா என்ற யானைக் குட்டியை சட்ட விரோதமாக வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதிவான் திலிண கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது அவரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்த போது, சட்டத்தரணிகள் ஊடாக அவர் நுகேகொட நீதிவான் கனிஷ்க விஜேரத்ன முன்னிலையில் சரணடைந்தார். இதனையடுத்து கடந்த ஜூன் 2 ஆம் திகதி சந்தேக நபரான திலிண கமகேவுக்கு பிணை வழங்கிய நுகேகொட நீதிமன்றம் அவர் மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்துவது அடிப்படையற்றது எனவும் அக்குற்றச் சாட்டுக்கள் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டதின் கீழ் வராது எனவும் பிணைத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந் நிலையிலேயெ நுகேகொட நீதிவானின் குறித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 7 ஆம் திகதி சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி நுகேகொட நீதிவானின் உத்தரவுக்கு நேற்று வரை இடைக்கால தடை வித்திருந்த கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் சந்தேக நபரான முன்னாள் நீதிவான் திலிண கமகேவை மன்றில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
நேற்றைய தினம் இது குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க அறையில் நீதிபதி மணிலால் வைத்தியதிலக முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் உத்தரவுக்கு அமைய திலிண கமகே, நுகேகொட நீதிவான் நீதிமன்றின் பதிவாளர் ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
சந்தேக நபரான திலின கமகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வாவின் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, சிரேஹ்ச்ட சட்டத்தரணி அஜித் பத்திரண உள்ளிட்ட சுமார் 20 சட்டத்தரணிகள் ஆஜராகினர். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்டவாதி திலீப பீரிஸும் சிரேஷ்ட சட்டவடஹி ஜனக பண்டாரவும் மன்றில் ஆஜரானர்.
வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது முதலில் அரச சட்டவாதி திலீப பீரிஸ் மன்றில் வாதங்களை முன்வைத்தார்.
"சந்தேக நபரான திலின கமகேவுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழானவை. எனினும் நுகேகொட நீதிவான் அதனை அதன் கீழ் வராது என தெரிவித்துள்ளார். அத்துடன் நுகேகொட நீதிவானுக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு தொடர்பில் நான் ஆட்சேபனம் முன்வைத்தேன். அதனையும் அவர் கண்டுகொள்ளவில்லை. பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் நாம் முன்வைத்த குற்றச் சாட்டுக்களை மறுத்து பிணை சட்டத்தின் கீழேயே நுகேகொட நீதிவான் சந்தேக நபருக்கு பிணையளித்துள்ளார். இது முற்றிலும் தவறான அனுகுமுறையாகும்.
இதனைவிட சந்தேக நபருக்கு மன்றில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் நுகேகொட நீதிமன்றின் பதிவாளர் மன்ரை அவமதிக்கும் விதமாக நடந்துகொன்டுள்ளார். வழக்குப் புத்தகத்தை மேல் நீதிமன்றில் ஒப்படைக்க இந்த மன்று கட்டளையிட்டும் அவர் இன்றைய தினமே அப்புத்தகத்தை மன்றுக்கு வழங்கியுள்ளார். இது மன்றை அவமதிக்கும் செயல் என வாதிட்டார்.
இதனையடுத்து சந்தேக நபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனது சேவை பெறுநர் மன்றுக்கு கட்டுப்பட்டே நடப்பதாகவும் அவர் மன்று அழைத்தபோதெல்லாம் மன்றில் ஆஜராகியுள்ளதால் பிணை வழங்குவதில் சிக்கல் இல்லை என குறிப்பிட்டார்.
இதனையடுத்து நீதிபதி மணி லால் வைத்தியதிலக மன்றை 10 நிமிடங்களுக்கு மீளாய்வு மனுவில் தீர்ப்பு வழங்க ஒத்திவைத்தார்.
10 நிமிடங்களில் மீளவும் மன்றின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்ட மா அதிபரின் மீளார்வு மனு மீதான தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.
அரச சட்டவாதியின் வாதங்களை இந்த மன்று பூரணமாக கவனத்தில் கொள்கிறது. அத்துடன் இந்த வழக்குடன் தொடர்புடைய அடிப்படை வழக்குப் புத்தகம் மன்றுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனையும் மன்று ஆராய்ந்தது.
இதில் வழக்குப் புத்தகத்தின் 741 ஆவது பக்கம் மீது மன்றின் அவதானம் செலுத்தப்படுகிறது. அதில் இந்த வழக்குடன் தொடர்புடைய யானைக் குட்டி பொதுச் சொத்து என்பதற்கான உதவி பொலிஸ் அத்தியட்சரின் மதிப்பீட்டு அறிக்கை உட்பட அனைத்தும் உள்ளன. அதனடைப்படையில் மேலோட்டமாக பார்க்கும் போது இந்த யானைக் குட்டி விவகாரம் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் வருவதை அவதானிக்க முடிகிறது.
எனவே நுகேகொட நீதிவான் இது பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் வராது என அளித்த உத்தரவு தவறுகளுடன் கூடியது. இந் நிலையில் கடந்த 2 ஆம் திகதி வழங்கப்பட்ட சந்தேக நபருக்கான பினை உத்தரவு தொடர்பிலும் இந்த மன்று கவனம் செலுத்துகிறது.
அதன்படி சந்தேக நபரான திலின கமகே தாமாக வந்து நீதிமன்றில் சரணடைந்துள்ளார். அத்துடன் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். அத்துடன் அவர் நீதிச் சேவையில் அதாவது மஜிஸ்திரேட் ஆக கடமையாற்றியுள்ளார். இந் நிலையில் அவர் நீதிமன்றை புரக்கணிப்பார் என கொள்ள முடியாது. ஆகவே அந்த மூன்று காரணிகளையும் விஷேட நிலைமையாக கருதி இந்த நீதிமன்றம் பிணையில் செல்ல அவருக்கு அனுமதியளிக்கிறது.
அதன்படி 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல சந்தேக நபரை இந்த மன்றுஅனுமதிக்கிறது. பிணையாளர்களில் ஒருவர் அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரியாக இருக்க வேண்டும். அத்துடன் சந்தேக நபர் வெளி நாடு செல்ல முடியாது. கடவுச் சீட்டை மன்றில் ஒப்படைக்கவும். இதனைவிட ஒவ்வொரு ஞாயிறு தினமும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் சந்தேக நபரின் பிணை ரத்துச் செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதிபதி மணிலால் வைத்திய திலக அறிவித்தார்.
உத்தரவை அடுத்து சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டவாதி திலீப பீரிஸ்பின்வருமாறு மன்றில் பிரஸ்தாபித்தார்.
' நீதிபதியின் உத்தரவுக்கு தலை வணங்குகிறோம். மக்கள் நீதிமன்றம் மீது கொன்டுள்ள நம்பிக்கை அதிகரிக்கும் வண்னம் நீதிமன்றங்கள் செயற்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக அமைய வேண்டும். இன்று கூட இந்த மன்றுக்கு சந்தேக நபரான திலின கமகே, நீதிபதி பயன்படுத்தும் சிறப்பு வழியூடாகவே வந்தார். இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு சாதாரண நபருக்கு எதிரான விசாரணையில் இடம்பெறுமா? அல்லது இடம்பெற்றால் அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை இப்படித்தான் இருக்குமா/ மக்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வர வேண்டும். அவ்வாறு நம்பிக்கை ஏர்படும் வண்னம் மன்ரின் நடவடிக்கைகள் இஒருக்க வேண்டும்.
அத்துடன் இது குறித்த அடிப்படை வழக்கு நாளை மறு தினம் ( நாளை) நுகேகொட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அப்படியானால் இத்தகைய தவறான உத்தரவை வழங்கிய நீதிவான் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது குறித்து அவசரமாக ஆராயப்படல் வெண்டும். நீதிச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் ஊடாக இவ்வழக்கை விசாரிக்க வேறு ஒரு நீதிவானை நியமிக்க மேல் நீதிமன்றம் அவரது அவதானத்துக்கு இவ்விடயத்தை கொண்டு செல்ல வேண்டும். என்றார்.
இதனையடுத்து ஜனதிபதி சட்டத்தரணி அணில் சில்வா நீதிமன்ற உத்தரவை அப்படியே ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவே மீளாய்வு விசாரணைகள் நிறைவுக்கு வந்தன. நுகெகொட நீதிமன்றுக்கு சென்று பிணை நிபந்தன்பைகளை பூர்த்தி செய்ய சந்தேக நபருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடிவுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM