மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 19 சிறைக்கைதிகள் இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியடசகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார். 

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் சிறைச்சாலை அத்தியட்சகர் சகல நீதிமன்றங்களுக்கும் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து  நீதிமன்ற நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்து சிறைக்கதிகளை பிணையில் விடுவிக்கும் நடவடிக்கையினையடுத்து நேற்று முன்தினம் (30.03.2020) முதற்கட்டமாக 162 சிறைக்கைதிகளை பிணையில் விடுவித்தனா்.

இதற்கமைய  இன்று இரண்டாம் கட்டமாக 19 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 181 பேர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.