(நா.தனுஜா)

உலகலாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடைகளின் காரணமாக தமது அனைத்துப் பயணிகள் விமாசேவைகளையும் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தற்போது அமுலில் உள்ள பயணத்தடைகளின் காரணமாகவே தமது விமானசேவை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும்இ நிலைவரம் குறித்துத் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக அறிவித்திருக்கும் அந்நிறுவனம்இ பயணத்தடைகள் நீக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாகவே தமது விமானசேவைகளை ஆரம்பிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

எனினும் இக்காலப்பகுதியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் அதற்குத் தமது விமானங்கள் இயங்கும் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறியிருக்கிறது.

கடந்த 40 வருடகாலங்களில் முதற்தடவையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இத்தகையதொரு நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும்இ தமது கட்டுப்பாட்டில் இல்லாத இவ்விடயத்தினால் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் தமது வாடிக்கையாளர்களுக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் காணப்படுமாயின்  011 7771979 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்வதன் மூலம்மய மேலதிக விபரங்களைப் பெறமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.