ஸ்டார் வோர்ஸ் ஹோலிவுட் திரைப்படத்தில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் திங்கட்கிழமையன்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

தனது 76 ஆவது வயதில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் லண்டன் அருகே உள்ள வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது அவரது மனைவி அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தமையினால் அவருக்கு, ஆண்ட்ரூ ஜாக்கை சந்திக்க முடியாது போயுள்ளது.

அவரது இறப்புக்கு 51 வயதுடைய அவுஸ்திரேலிய நடிகையான ரேச்சல் கிரிஃபித்ஸ் தனது இன்ஸ்டர்கிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.