லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு !

Published By: Vishnu

01 Apr, 2020 | 03:58 PM
image

லெபனானில் சட்டவிரோதமாக வாழும் இலங்கையர்களுக்கு நிபந்தனை பொது மன்னிப்பினை வழங்குவதற்கு அந் நாட்டு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

கொவிட் 19 பரவல் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் முடக்கல் நடவடிக்கையை லெபனான் முன்னெடுத்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

லெபனான் அரசாங்கத்தின் பொதுமன்னிப்பினூடாக முறையான சட்ட ஆவணங்கள் இன்றி அங்கு பணிபுரியும் இலங்கை குடியேற்றவாசிகள் நாடு திரும்ப முடியும்.

லெபனானில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குற்றவியல் குற்றச்சாட்டுக்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் பொது மன்னிப்பு பெற முடியும்.

அதன்படி, இலங்கைக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்வதன் மூலம் வெளியேறும் அனுமதியினைப் பெறலாம்.

பொது மன்னிப்பு பெற விரும்புவோர் தங்களது தகவல்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் வழியாக தூதரகத்திற்கு அனுப்பலாம்.

எனினும் இலங்கை மற்றும் லெபனான் இடையே விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரே வெளியேறும் அனுமதி வழங்கப்படும்.

இருந்தபோதும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கான அனுமதியை அரசாங்கம் சுகாதாரத் துறையுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே வழங்கும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: Email: slemb.beirut@mfa.gov.lk

Telephone /WhatsApp:  00961 76700657  /  00961 81363894

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14