நடிகர் விஷ்ணு விஷால் தற்போது காதலித்து வரும் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.

‘வெண்ணிலா கபடிக்குழு’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதன் பிறகு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வளர்ந்து பெரிய வசூல் வெற்றியை பெற்றார்.

 அதன் பிறகு முன்னணி நடிகராக வலம் வந்தாலும், அவருடைய சொந்த வாழ்க்கையிலும் சில எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டதால், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகும் தொடர்ந்து திரைப்படத் துறையில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு இந்திய பூப்பந்து விளையாட்டு வீராங்கனையான ஜ்வாலா கட்டாவிற்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலானது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள். 

இது குறித்து ஜ்வாலா பேசுகையில்,

“இருவீட்டாரும் திருமணம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். திருமண திகதி நிச்சயம் செய்தவுடன் விரைவில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.” என்றார். 

இதன் மூலம் விரைவில் விஷ்ணு விஷாலும் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா திருமண வாழ்க்கையில் இணைய இருக்கிறார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது.

இதனிடையே விஷ்ணு விஷால் தற்போது F I R என்ற படத்திலும், காடன் மற்றும் ஜெகஜால கில்லாடி என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.