(செ.தேன்மொழி)
அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்குணுகொலபலஸ்ஸ - ரன்முத்துவ பகுதியில் செவ்வாய்க்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது அங்குணுகொலபெலஸ்ஸ இஹூங்கம மற்றும் பரவகும்புக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34 - 43 ஆகிய வயதுகளுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 4500 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதுடன் அவர்களை கைது செய்தும் வருகின்றனர்.
அதற்கமையவே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM