உத்தியோகபூர்வமாக அரச குடும்பத்திலிருந்து வெளியேறினர் ஹரி - மேகன் தம்பதியினர்

Published By: Digital Desk 3

01 Apr, 2020 | 11:51 AM
image

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து இளவரசா் ஹரியும் அவரது மனைவி மேகன் மார்க்கலும் நேற்று (31.03.2020) உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளனர். 

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி, இளவரசி மேகன் மார்கல் தம்பதியினர் அண்மையில் அறிவித்தனர்.

இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இளவரசர் ஹரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்தது.

இருப்பினும் அவர்களது முடிவுக்கு மதிப்பளித்து, அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது.

அதேவேளை, பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் நேற்று புதன்கிழமை அதிகாரபூர்வமாக விலகியுள்ளார்கள்.

இதனையடுத்து ஹரி-மேகன் தம்பதி இன்றிலிருந்து (01.03.2020) பக்கிங்ஹாம் அரண்மனை விவகாரங்களில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார்கள்.

தற்போது இருவரும் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25