கொள்ளைநோயான கொரோனாவின் பலியெடுப்பு இன்னும் தீர்ந்தபாடிலில்லை தற்போதுவரை கொவிட் 19 எனப்படும் கொரோனாவால் இதுவரை 42,151 பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 858,669 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 178,099 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த கொள்ளைநோயானது உலகளவில் 203 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தற்போது குறிவைத்துள்ளது. 

நேற்றுவரை அமெரிக்காவில் 1888,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 3,889 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 748 உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 105,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12,428 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் இங்கு 837 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, ஸ்பெயினில் 95,923 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,464 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு நேற்று மாத்திரம் 748 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனால் சீனாவில் இதுவரை 81,518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,305 பேர் இறந்துள்ளதுடன் நேற்று மாத்திரம் அங்கு 5 மாத்திரம் பலியாகியுள்ளனர்.

இந்த கொள்ளை நோயான கொவிட் 19 எனப்படும் கொரோனாவின் ஆரம்பமாக சீனாவின் ஹுபே மாகாணத்தின் வுஹான் கருதப்படுகின்ற நிலையில், அங்கு பாதிப்புகளோ உயிரிழப்புகளோ  ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போதிலும் அங்கு குறைவாகவே காணப்படுகின்றது.

இதேவேளை, பிரான்ஸ் நாட்டில் இதுவரை 52,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 499 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானில் இதுவரை 44,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 2,898 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 141 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இதுவரை 25,150 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,009 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 381 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று மாத்திரம் உலகளவில் புதிய கொரோனா தொற்றாளர்களாக 73,718 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 4,378 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, உலகிலுள்ள அனைத்து நகரங்களும் முடக்கப்பட்டுள்ளன. அன்றாட மனித வாழ்க்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் உணவிற்கான தட்டுப்பாடுகள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன. அத்துடன் நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை 143 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர் இதுவரை 17 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.